🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

ஆன்மீக தியானம்

சுயத்தை தேடுதல் – சமூகத்திற்கு சேவையாற்றுதல் – சுற்றுச்சூழலைக் காப்பாற்றுதல்

இது விஷ்வ நிகேதன் சர்வதேச அமைதி நிலையத்தின் விசேடத்துவம் பெற்ற அழுத்தத்தைக் குறைக்கும் நிகழ்ச்சித்திட்டமாகும்.

மனிதர்களாகிய நம் வாழ்வு பெரும்பாலும் நிகழ்காலத்தை அனுபவிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் ‘காரியங்களைச் செய்தல்’ அல்லது ‘விடயங்களைச் சரிசெய்தல்’ ஆகியவற்றிற்கு நேரத்தை செலவிடுவதன் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. இதன் விளைவாக நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிய ‘அறிவின்மை’ ஏற்படுகின்றது. மனிதர்களாகிய நம் வாழ்க்கை மற்றைய மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர உலகத்துடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

‘அறிவின்மை’ நம் மனதை ஆளுகையில், நமது செயல்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அதன் செல்வாக்கு உட்படுத்தப்படுகின்றது என்பதுடன் இந்த இணைப்புகளை எதிர்மறையாக பாதிக்கின்றது. இது நம் சொந்த உடலுடன் தொடர்பு கொள்வதிலிருந்தும், நம் சொந்த எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களால் நாம் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை உணர்வதையும் தடுக்கின்றது. ‘கவனத்துடனான விழிப்புணர்வை’ வளர்ப்பதன் மூலம், நமது உடலுடனும் அதன் சமிக்ஞைகளுடனும் தொடர்பில் இருப்பதற்கான நமது திறனை வலுப்படுத்துவடன் எமது உள உடல் சமநிலையைப் பேணுவோம். அறிவுத்திறம் என்பது மனிதர்களை மற்ற உயிரினங்களுக்கிடையில் தனித்து நிற்கச் செய்யும் தனித்துவமான ஆற்றலாகும். மனதும் உடலுக்கும் இடையிலான ஊடாட்ட பயிற்சியானது, நமது பொதுவான மகிழ்ச்சியான இலக்கை அடைவதற்காக இந்த ஆற்றலை ஆராய அனுமதிக்கின்றது.

இந்த முழு நிகழ்ச்சித்திட்டமும் மூன்று தொனிப்பொருட்களை உள்ளடக்கியதாகும்:

  • தன்னைத் (சுயத்தை) தேடுதல்
  • சமூகத்திற்குச் சேவை செய்தல் /li>
  • சுற்றுச்சூழலை காப்பாற்றுதல்

தன்னைத் தேடுதல்

மனதுக்கும் உடலுக்கும் இடையே சரியான சமநிலையை மீண்டும் அடைந்துகொள்வதற்காக விழிப்புடன் கூடிய யோகா உள்ளிட்ட தியானப் பயிற்சிகள், உடல் ஸ்கேன் பயிற்சி, விழிப்புடன் இருந்தல் சார்ந்த பயிற்சிகள் மூலம் நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகள் பற்றிய விழிப்புணர்வை நொடிக்கு நொடி அனுபவிக்கும் கலையைக் கற்றுக்கொள்வோம். ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகளை வேறுபடுத்துவதற்கான திறன்களைப் நாம் பெற்றுக்கொள்வதுடன் நம் உடலிலும் உள்ளத்திலும் அதிக தாங்குதன்மையை வளர்த்துக்கொள்வோம்.

சமுதாயத்திற்கு சேவை செய்தல்

நமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நாம் தொடர்பு கொள்ளும் நபர்களின் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களுக்கு பதிலளிப்பதற்கான நமது திறனை வலுப்படுத்தும் கலையை நாங்கள் கற்றுக்கொள்வோம். உலகளாவிய அன்பான இரக்க தியானத்தின் மூலம் மற்றவர்களின் எதிர்மறை உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் மனித துன்பங்களை இரக்கத்துடன் எவ்வாறு கையாள்வது என்பதை நாங்கள கற்றுக்கொள்வோம்.

சுற்றுச்சூழலைக் காப்பாற்றுதல்

இயற்கையுடனான தியானப் பிரதிபலிப்புகள் மற்றும் நீர் சிகிச்சை பயிற்சி மூலம் நம் இதயங்களையும் மனதையும் தணிப்பதற்கு இயற்கையில் உள்ள சிறிய விடயங்களைக் கூட பாராட்ட கற்றுக்கொள்வோம்.

இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்

இது பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறியுள்ள, திருமணமாகாத மற்றும் வேலையில்லாமல் உள்ள 18-35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு நிகழ்ச்சிதிட்டமாகும், இந் நிகழ்ச்சிதிட்டத்திற்கு உரித்துடைய குழுக்கள் சுயாதீனமாகவோ அல்லது கிராமங்களில் இருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இளைஞர்களுக்கு வாழ்க்கை இலக்குகளை உருவாக்க உதவுதல், குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களின் திட்டங்களுக்கு தேவையான,நிதி உடல் மற்றும் ஆன்மீக வளங்களை அடையாளம் காணுதல் ஆகியவை இந்த திட்டத்தின் சில நோக்கங்களாகும். இது அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிய உதவுகிறது. அவர்களுக்கு நேர்மறையான சிந்தனை, நீர் சிகிச்சை மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் வெற்றிகரமான வாழ்க்கையை எளிதாக்கும் தியான நுட்பங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்படுகின்றது. போதைப்பொருள் மற்றும் மதுபானம் இல்லாத வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்த நிகழ்ச்சியின் போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சிறுவர்கள்

சிறுவர்கள் இயல்பிலேயே சுறுசுறுப்பான மற்றும் உற்சாகமான மனிதர்களாக இருப்பதுடன் அவர்களின் சூழல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்று ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்களாகும். இன்றைய கல்வியானது உடல் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டில் குறைந்த கவனத்தை செலுத்துவதுடன் கல்வி அடைவுகளில் முதன்மையாக கவனம் செலுத்துகிறது. சிறுவர்களின் மனவெழுச்சி மற்றும் ஆன்மீக அம்சங்கள் குறைவான கவனத்தைப் பெறுகின்ற போதிலும் கல்வியானது சிறுவர்களின் அறிவுசார், உடல், மனவெழுச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஒருங்கிணைப்பதாக அமைதல் வேண்டும்.

அறிவாற்றல் மற்றும் திறன் சார்ந்த மேம்பாடுகள் உலகத்திற்கு வெளியில் உள்ள விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தும் அதேவேளை தனிப்பட்ட விருத்தியானது உலகத்திற்கு உள்ளே உள்ளவற்றை பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இவ்விடயம் சிறுவர்கள் சுயம் என்ற தங்களுடனும் அத்துடன் மற்றவர்களுடனும் இணக்கமான உறவுகளுடன் சமநிலையான மற்றும் பயனுடைய நபர்களாக மாறுவதற்கு அவசியமாகின்றது (நேர்மறையான செயல்கள் மற்றும் இணக்கமான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது).

சடப்பொருள் மற்றும் உடனடி மனநிறைவுக்கான தேடலின் அடிப்படையில் சிறுவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஒரு சமூகத்தில், “சிறுவர்களுக்கான விழிப்புணர்வு” மூலம் விஸ்வ நிகேதன் சிறுவர்களுக்கு அவர்களின் உள்ளார்ந்த சுயத்தையும் அவர்களின் மனதையும் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பையும் அவர்களின் மறைந்திருக்கும் அனைத்து திறன்கள், மறைந்திருக்கும் ஆற்றல்கள் மற்றும் நுட்பமான சிக்கல்கள் ஆகியவற்றையும் காண்பதற்கு உதவுகின்றது. அவர்கள் தங்கள் சுறுசுறுப்பான மனதைக் கவனிக்கக் கற்றுக் கொள்ளும்போது, தற்போதைய தருணத்தை பற்றி எப்படி அதிக கவனம் செலுத்துவது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். விஷ்வ நிகேதன் இந்த சமய பிரிவினையற்ற திட்டத்தை தியான நுட்பங்களுடனும் (தியானம் சிறுவர்களுக்கு ஒரு சுமையாக மாறாமல் இருப்பதற்கு கவனமாக செலுத்தும் அதேவேளை), குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் நிலவும் அச்சம் மற்றும் பதட்டங்களை சமாளிக்க அவர்களுக்கு உதவும் ஊடாடும் பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் உரையாடல்கள் ஊடாகவும் வழங்குகின்றது. சுயத்தை கண்டுபிடித்தல், ஊடாடும் பயிற்சிகள், திறந்த உரையாடல் மற்றும் பகிரப்பட்ட கற்றல் போன்ற ஆர்வத்தை தூண்டும் வழிவகைகள் ஊடாக சிறுவர்களின் மனம், உடல் மற்றும் இதய இணைப்பின் சக்திவாய்ந்த கொள்கைகளைப் பயிற்சி செய்து பயன்படுத்துவார்கள்.

நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள்

இன்றைய வணிக உலகம் கவலையும் மன அழுத்தமும் நிறைந்ததாக இருக்கின்றது. மேற்பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள், போட்டியாளர்கள், குடும்பம் மற்றும் எங்கள் சொந்த மனம் ஆகியவற்றின் கோரிக்கைகளை சமப்படுத்த ஒவ்வொரு நாளும் நாங்கள் கேட்கப்படுகிறோம். நாம் கவனமாக இல்லாவிட்டால், “வெற்றி” என்ற குறிக்கோள் நமது மிகவும் உண்மையான விழுமியங்களை மறைத்து, நம்மை அறியாமலேயே ஆழ்ந்த தனிப்பட்ட இழப்புகளாக மாற்றிவிடும்.

எங்கள் 24 மணி நேர நாட்கள் பொறுப்புகள், காலக்கெடு, கடினமான தேர்வுகள் மற்றும் பதட்டங்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் உள்ள படிப்பினைகளுக்கு நாம் திறந்த நிலையில் இருப்போமேயானால், இதுபோன்ற சவால்களை சமாளிப்பதை விட அதிகமான விடயங்களை செய்ய முடியும். வேலைப்பளு நிறைந்த தொழில்முயற்சி முகாமைத்துவத்திற்கான பொறுப்புள்ள தொழில்முயற்சி நிர்வாகத்திற்கான ஆன்மீக வளங்கள், தங்கள் வணிக சமூகம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு நிலையான ஆதரவு அமைப்பை உருவாக்குவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் எழக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க பயனுள்ள தீர்வுகளை உருவாக்க உதவும் ஆழமான சுய விழிப்புணர்வை வளர்ப்பதற்கான தளத்தையும் இது வழங்குகிறது.

விஷ்வ நிகேதன் சர்வதேச அமைதி மையத்தில் தியானம் மற்றும் உரையாடல் அடிப்படை அனுமானங்களுடன் தொடங்குகிறது: நம் ஒவ்வொருவருக்கும் மனமும் இதயமும் உள்ளது. நமது உடலானது உளவியல் மற்றும் ஆன்மீக ஆற்றலால் வழிநடத்தப்படுகிறது. நமது உள்ளார்ந்த பலத்தைத் தட்டி எழுப்பினால், எம் மனது செழிப்பதைக் காணலாம். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், தொழில்முயற்சி உலகின் தலைவர்களிடையே விழிப்புணர்வுடன் கூடிய ஆக்கப்பூர்வமான தொடர்புகளின் ஊடாக, தனிநபர்களும் அவர்களது நிறுவனங்களும், எம்மிடம் இருக்கின்றதென ஒரு போதும் அறியாதிருந்த வளங்களைக் கண்டறிய உதவும் திறன்களில் நிபுணத்துவம் அடைவதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.

Back to Top