🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

தாய்மை தொடர்பிலான முழுமையானதொரு அணுகுமுறை

நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள்கள்

  • உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மற்றும் மனவெழுச்சி ரீதியாகவும் பரிபூரணமடைந்த ஆரோக்கியமான ஒரு குழந்தையை உருவாகுவதற்கு வழிசமைத்தல்.
  • தாயின் ஆன்மீக, உள மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
  • பிறக்கவிருக்கும் குழந்தையின் உள மற்றும் உடல் வளர்ச்சி செயன்முறைக்கு உதவும் ஆரோக்கியமான தினசரி பழக்கங்கள்.நடைமுறைகள் மற்றும் நடத்தை முறைகளை மேம்படுத்துதல்.
  • தாய் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் பொருட்டு பொருத்தமானதும் துடிப்பானதுமான சூழலை உருவாக்குவதில் வருங்கால தந்தையின் பங்கை நிலைநிறுத்த உதவுதல்.
  • அன்பு, மகிழ்ச்சி மற்றும் புரிதலுடன் வலுவூட்டப்பட்ட குடும்பத்தை உருவாக்க உதவுதல்.
  • பொது விழிப்புணர்வு மூலம் சமூகத்தில் தாய் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அமைதியானதொரு சூழலை உருவாக்குதல்.
  • கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய ஆரோக்கியமான கலாச்சார மற்றும் மத பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு புத்துயிரளித்தல்.

நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளடக்கம்

  • மனதுக்கும்-உடலுக்குமான தொடர்பு
  • தாய்-சேய் தொடர்பு பற்றிய மருத்துவ மற்றும் அறிவியல் சான்றுகள்.
  • அன்பிரக்க தியானம், நடைபயிற்சி தியானம், மூச்சுப்பயிற்சி தியானம் மற்றும் கவனம் சார்ந்த தியானப் பயிற்சி போன்ற ஆன்மீக நடைமுறைகள், ஆரோக்கியமான தினசரி பழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் நடத்தை முறைகளை உருவாக்குதல்.
  • கர்ப்பம் மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு தொடர்பான ஆரோக்கியமான கலாச்சார மற்றும் மத பழக்கவழக்கங்கள் (‘பிரித்’-பௌத்த வேதங்களை ஓதுதல், பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மற்றும் தாலாட்டு பாடுதல் போன்ற) பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • மற்றும் தாலாட்டு பாடுதல் போன்ற) பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • விழிப்புணர்வுடன் பிள்ளைகளை வளர்த்தல்.
  • விழிப்புணர்வுடன் யோகா.
  • சுற்றாடல் நேயமிக்கதொரு பிள்ளையை வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.

கருத்தரித்த தருணத்திலிருந்து, பிறக்கவிருக்கும் குழந்தை தனது தாயின் எண்ணங்கள், உணர்வுகள், மனவெழுச்சிகள் மற்றும் செயல்களை உணர்கின்றது. இதற்குக் காரணம் தாயினதும் கருவில் உள்ள பிள்ளளையினதும் மனதும் உடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதளவிற்கு இரண்டறக் கலந்திருப்பதாகும். மனதில் ஒரு எண்ணம் தோன்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மூலக்கூறு உருவாகின்றது. தாயின் மனதில் உள்ள தூண்டுதல்கள் உடனடியாக நரம்பு இரசாயனங்களின் தட்டுகளாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் உடல் முழுவதும் கலங்கள் மற்றும் திசுக்களுடன் தொடர்பு கொள்கின்றன. பிறக்கவிருக்கும் குழந்தை அதன் தாயின் உடலின் ஒரு பகுதியாக இருப்பதால், தாயின் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் மனவெழுச்சிகள் கருவின் உடலில் நுழையும் மூலக்கூறுகளாக பரிமாற்றம் அடைகின்றன. கருவுற்றிருக்கும் தாய்க்கு தனது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகளை சரியான முறையில் கையாள முடியாவிட்டால், குறிப்பாக ஆரோக்கியமற்ற மனநிலைகள் அவளது உள்ளத்தில் பரவும் போது, கருவும் பாதிக்கப்பட்டு இறுதியில் உடல் மற்றும் உளநலன் பாதிக்கப்பட்ட ஒரு சிசு உலகிற்கு வந்தைகின்றது.

தாயின் நீர் நிறைந்த வயிற்றில் (பனிக்குடத்தில்) குழந்தை வளரும்போதே, குழந்தையின் சுய விழிப்புணர்வு சார்ந்த உணர்வு உதயமாகின்றது. குழந்தையின் உணர்வு சார்ந்த விழிப்புணர்வு விருத்தியாகும் போது, அது தாயின் உடலில் இருந்து எழும் நுட்பமான ஒலிகள், உணர்வுகள், காட்சிகள், சுவைகள் மற்றும் வாசனைகளை உணர்ந்து பதிலளிக்கிறது. வருங்கால பெற்றோர் தரும் அரவணைப்பும் பாதுகாப்பும் பிறக்காத குழந்தையின் மரபணு அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களாக இது தொடர்பான பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாயின் கருப்பையில் உள்ள இந்த சிறிய உயிரில் 18 நாட்களில் இதயத் துடிப்பு ஏற்படத் தொடங்குவதுடன் 12 வாரங்களில் அவயவங்களின் அசைவுகளும் தொடங்குகின்றன எனவும் ஊசி குத்துதல், அடிவயிற்றை அழுத்துதல் போன்ற வெளிப்புற தூண்டுகைகளுக்கு இந்த உயிர் பதிலளிக்கின்றதெனவும் விஞ்ஞான ரீதியில் நிறுவப்பட்டுள்ளது. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே கருவானது மூளை கலங்களை உருவாக்கத் தொடங்குவதுடன், மேலும் அது புதிதாகப் பிறந்த குழந்தையாக உலகிற்குள் நுழைவதற்கு சற்று முன்னதாகவே அதிகமான கலங்களைப் பெருக்கி கலங்களின் எண்ணிக்கையை பில்லியன்களாக உயர்த்திக்கொள்கின்றது.

ஆரோக்கியமற்ற எண்ணங்கள், உணர்வுகள், மனவெழுச்சிகள் மற்றும் செயல்களின் ஆபத்துக்களிலிருந்து தாய் மற்றும் குழந்தையைப் பாதுகாப்பதற்காக, தாயின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகளின் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, அமைதி, அன்பு, ஒத்திசைவு மற்றும் புரிதல் ஆகியவை நிலவுமொரு சூழலை ஒரு தந்தை உருவாக்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையை எதிர்பார்த்திருக்கும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் குழந்தைக்கு மென்மையான இசை, அன்பான கனிவான வார்த்தைகள் ஊடாக இந்த சிறிய உயிருக்கு மதிப்பளித்தல், ஏற்றுக்கொள்ளுதல் போன்ற செய்திகளை அனுப்பும்போது, இந்த ஆரோக்கியமான எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகள் குழந்தைக்குள் பதிந்து, அக்குழந்தை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆரோக்கியமான ஒரு குழந்தையாக உலகிற்குள் நுழைகின்றது.

பிறக்கவிருக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கான திறனை கொண்டிருக்கின்றார்கள் எனும் விடயம் அவர்களின் பிறப்புக்கான நமது தொழில்நுட்ப அணுகுமுறையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளக் கோருகின்ற அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளதொரு கண்டுபிடிப்பாகும். ‘தாய்மைக்கான முழுமையான அணுகுமுறை’ நிகழ்ச்சித்திட்டம், மகப்பேறுக்கு முந்தைய தாக்கங்களை மிகவும் பரந்த முறையில் ஆய்வு செய்து, ஆன்மீகத் தொடர்புடன் நமது சமூக-கலாச்சார ஞானத்தைப் பயன்படுத்தி இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு முயற்சிக்கிறது.

Back to Top