மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாக்களுக்கு சமாந்தரமாக, 1968 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி கலாநிதி ஏ.ரீ ஆரியரத்ன அவர்கள், அப்போதைய இலங்கையின் சனாதிபதி மேதகு வில்லியம் கொபல்லவ அவர்களிடம் மகாத்மா காந்தியின் மகத்தான பணி நினைவுகூறப்பட வேண்டுமெனும் முன்மொழிவை சமர்ப்பித்தார்.
ஒரு சர்வோதய ஆசிரமம் அமைக்கப்பட வேண்டும் என்பது மேற்படி முன்மொழிவின் ஒரு அம்சமாகவிருந்தது.
1999 ஆம் ஆண்டு விஷ்வ நிகேதன் சர்வதேச அமைதி மையம் ஆன்மீக நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாயினும் அது சமூக அபிவிருத்தியுடன் மிகவும் தொடர்புடையதாக அமையும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இது நனவானது. சர்வோதய தலைமையகத்திற்கு அருகில் விஸ்வ நிகேதன் நிறுவப்பட்டதுடன் சர்வோதயவுடன் பணியாற்றுபவர்களுக்கு ஆன்மீக உத்வேகத்தை அளிப்பதற்கு எதிர்பார்க்ப்பட்டது. தற்போது தங்களின் வாழ்க்கையையும் தங்களின் குடும்பத்தையும் நிலைநிறுத்துவதற்கு வேலைப்பளுவுடன் கூடிய அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓய்வு தேவையாக இருப்பதுடன் தொலைதூர வன மடங்களுக்கு சென்று அத்தகைய ஓய்வினை பெற முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வினை பெற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே, விஷ்வ நிகேதன் தியானம் கற்கவும், தியான அமர்வுகளில் பங்கேற்கவும், அன்றாட வாழ்வில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு ஆன்மீக ஆற்றலைச் சேர்ப்பதற்கும் வாய்ப்புகளை அளிக்கும் அமைதியான மற்றும் சாந்தமான இயற்கை சூழலை வழங்குகிறது.