விஸ்வ நிகேதன் அமைதிக்கான ஒரு நிலையமாகும். அனைத்து சமூகங்களுக்கும் உள்வாரியான மற்றும் வெளிவாரியான அமைதியின் உயரிய குறிக்கோளை அடைந்துகொள்வதற்கான ஒரு தளமாக இந்நிலையம் திகழ்கின்றது. தனிநபர்கள் தங்களுக்குள்ளே தோன்றும் மோதலை நிறுத்தி உள் அமைதியை அடையும் போது மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும் எனும் உறுதியான நம்பிக்கையில் இந்நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
Holistic approach to healing the mind, healing the society and healing the environment
அமைதிப் பூங்கா
நிலையத்தின் தளவமைப்பு மற்றும் நிறைவேற்றம் ஆகியவை மனதைத் தூய்மைப்படுத்துவதற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் …
அமைதி அரும்பொருள் காட்சிசாலை
விஸ்வ நிகேதன் சர்வதேச சமாதான நிலையத்தின் ஸ்தாபகரும் சர்வோதய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி ஏ.ரீ. ஆரியரத்ன அவர்கள் …
அமைதி நூலகம்
ஆரம்பத்தில் அமைதி நூலகமானது அமெரிக்காவில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் அமைதி நூலகமான அட்லாண்டாவிலிருந்து நன்கொடையாகக் கிடைத்த சுமார் 2,000 …
விஷ்வ நிகேதனில் உலாவருதல்
ஸ்தாபகரின் தொலைநோக்கு
கலாநிதி ஏ.ரீஆரியரத்ன அவர்கள் இலங்கை சர்வோதய சிரமதான இயக்கத்தின் ஸ்தாபகரும் தற்போதைய தலைவருமாவார். இந்த இயக்கமானது அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் பொருட்டு ‘உழைப்பு, சிந்தனை மற்றும் ஆற்றலைப் பகிர்தல்’ எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அடிமட்ட மனிதாபிமான அமைப்பாகும். சர்வோதய அமைப்பு பல இன்னல்களை எதிர்கொண்ட போதிலும் 1958 ஆம் ஆண்டு முதல் இலங்கை முழுவதும் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.
1931 ஆம் ஆண்டு இலங்கையின் தெற்கில் பிறந்த கலாநிதி ஆரியரத்ன அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கிராமிய பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை காலி மஹிந்த கல்லூரியிலும், உயர் கல்வியை வித்தியோதயா பல்கலைக்கழகத்திலும் கற்றார். கொழும்பில் உள்ள நாலந்தா கல்லூரியில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய அவர், அங்கு ஆசிரியராக பணியாற்றியபோது நாற்பது உயர்நிலைப் பள்ளி மாணவர்களையும் பன்னிரண்டு ஆசிரியர்களையும் கீழ்சாதியினரைக் கொண்ட ஒரு கிராமத்திற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார். இந்த மறக்கமுடியாத விஜயத்தின் போது, கலாநிதி ஆரியரத்ன அவர்கள் தனது மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களை கிராம மக்களுடன் உழைப்பு, சிந்தனை மற்றும் ஆற்றலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தனது தொலைநோக்கில் வழிகாட்டி, அவர்களின் கிராமத்தை மேம்படுத்த உதவினார். இந்த முதல் சிரமதான பணியானது சர்வோதயா சிரமதான இயக்கத்தின் தொடக்கத்தைக் பதிவுசெய்தது.
Testimonials of World Renowned Personalities
Awards Received
Records of the life-long, non-violent efforts of the founder of the Vishva Niketan International Peace Centre and the President of the Sarvodaya Movement Dr. A. T. Ariyaratne to develop a new social structure through Sarvodaya are displayed in the Peace Museum.