குழு தியானங்கள்
ஆன்மீக விழிப்புணர்வைக் கருத்தில் கொண்டு பயணிப்பதைப் கண்டு விஸ்வ நிகேதன் அமைதி மற்றும் தியான நிலையம் ஆண்டு முழுவதும் தியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. இது சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சந்திக்கும் நிகழ்ச்சியாகும். ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பலர் ஒன்று கூடி, இல்லற வாழ்கையில் உள்ள ஒருவன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு கவனத்தில் கொள்ள வேண்டிய கண்ணோட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி சிந்திக்கின்றனர். நமது வாழ்க்கை இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதற்கான மாற்று வழிகளும் விவாதிக்கப்படுகின்றன. தியானம் செய்ய ஆரம்பிப்பவர்கள் மற்றும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட விரும்பும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் ஆகிய இருசாராரும் ஒரே நேரத்தில் பலன்களைப் பெறும் வகையில் தியான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தனிநபர் தியான நிகழ்வுகள்
தியான ஆசிரியர் ஒருவடன் அல்லது அவ்வாறான ஆசிரியர் ஒருவர் இல்லாமலேயே முன் பதிவு மூலம் தியான வசதியைப் பயன்படுத்த தனிநபர்கள் வரவேற்கப்படுகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தியான பின்பற்றுனர்கள் விஷ்வ நிகேதனுக்கு முன் பதிவு செய்து குறுகிய கால வதிவிட தியான நிகழ்வுகளுக்கு வருகை தருகின்றனர்.